வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (21:30 IST)

ஜோதிகாவின் 'ஜாக்பாட்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஜாக்பாட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜாக்பாட் திரைப்படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. முதல்கட்டமாக  ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து ஜோதிகாவின் 'ஜாக்பாட்' திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு ஜோதிகா தரும் பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது 
 
ஜோதிகா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் ரேவதி, யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது