ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (11:20 IST)

’வலிமை’ படத்தில் போனிகபூர் மகள்: பரபரப்பு தகவல்!

’வலிமை’ படத்தில் போனிகபூர் மகள்: பரபரப்பு தகவல்!
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 13ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா அல்லது தள்ளி போகுமா என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது 
 
தமிழக அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் உள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் வெளிநாடுகளில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் வலிமை படத்தின் முன்பதிவுக்கான போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது அதில் அஜித்துடன் ஜான்வி கபூர், யாமி கவுதம் ஆகியோர்கள் நடித்து இருப்பதாகவும் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருக்கலாம் என்றும், இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது