அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!
முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September 2024 அன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது.
இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது.
வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது.
இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.