தான் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ரவி மோகன்!
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் ரிலிஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
சமீபத்தில் அவர் நடிப்பில் டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் கராத்தே பாபு படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. சட்டமன்றத்தில் நடப்பது போன்ற அந்த காட்சிகளின் தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து படத்துக்கு ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில் கராத்தே பாபு படம் பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசியுள்ளார். அதில் “கராத்தே பாபு படம் மிகச்சிறப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் மொத்த ஷூட்டிங்கும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நிறைவடையும்” எனக் கூறியுள்ளார்.