திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:18 IST)

ப்ரமோஷனில் உளறிக் கொட்டிய ஜெயம் ரவி… அதுதான் இறைவன் தோல்விக்குக் காரணமா?

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படம் 2 மணிநேரம் 33 நிமிடம் ஓடுவதாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் பாரத்த ரசிகர்கள் படம் பற்றி நெகட்டிவ்வாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் படத்தின் நீளம் 13 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனின் போது படக்கதாநாயகன் ஜெயம் ரவி “இந்த படத்தைப் பார்க்க குடும்பத்தோடு வராதீர்கள்” எனக் கூறியதே ரசிகர்கள் தியேட்டர்கள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தின் குரூரமான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ஜெயம் ரவி அவ்வாறு பேசியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.