வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (08:19 IST)

நெகட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஜெயம் ரவியின் இறைவன்

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படம் 2 மணிநேரம் 33 நிமிடம் ஓடுவதாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் படம் பாரத்த ரசிகர்கள் படம் பற்றி நெகட்டிவ்வாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பலரும் இந்த படத்தை ஒரு சைக்கோ த்ரில்லர் படம் என நம்பி சென்று ஏமாந்துவிட்டதாகவும் புலம்பி தள்ளி வருகின்றனர்.

படத்தின் திரைக்கதை சம்மந்தம் இல்லாமல் எங்கெல்லாமோ சென்று கொண்டிருப்பதாகவும், தமிழில் இதுவரை வந்த எந்த ஒரு சைக்கோ திரில்லர் படத்தை விடவும் இந்த படத்தில் வித்தியாசமாக எதுவும் இடம்பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளனர்.