வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (21:20 IST)

அப்பாடா பட வாய்ப்பு கிடைச்சிருச்சு.. பிக்பாஸ் பிரபலம் குஷி

பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான ஜனனி ஐயர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
தற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை சந்தீப் என்பவர் இயக்க உள்ளார். மர்மம், கொலை என்ற கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.
 
அசோக் செல்வனும், ஜனனியும் ஏற்கனவே தெகிடி படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்தூள்ளனர்.  
 
பிக்பாஸுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனனி ஏற்கனவே, பாகன், தெகடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.