ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:48 IST)

மீண்டும் தள்ளிப்போன ஜேம்ஸ் பாண்ட் பட ரிலீஸ் தேதி!

ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவை.

உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த படத்தின் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் சுமாராக 600 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தள்ளி வைக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இரண்டு நாட்கள் தள்ளி செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.