வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (11:13 IST)

ஜெய் ஆகாஷை ஏமாற்றிவிட்டு பிரபல நடிகரின் மனைவியான பெண்… பயில்வான் சொன்ன கிசுகிசு!

ராமகிருஷ்ணா மற்றும் கிச்சா வயசு 16 ஆகிய படங்களில் நடித்தவர் ஜெய் ஆகாஷ. லண்டனை சேர்ந்த இவர் நடிப்பதற்காகவே தமிழ்நாடு வந்த சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் வெற்றி பெறவில்லை.  அதன் பின்னர் அவர், படம் இயக்கப் போவதாக அறிவித்தார்.

ஜெய் பாலா‌ஜி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் பேரில் பல படங்களை இயக்கி தயாரித்தார். ஆனால் அந்த படங்களும் ஊத்திக் கொண்டன. இந்நிலையில் இப்போது அவர் ஜெய் விஜயம் என்ற  ஒரு புதுப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய அவர் “நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பணத்துக்காக என்னைவிட்டு வேறு ஒருவரை பணத்துக்காக கல்யாணம் செய்துகொண்டார். ஆனால் அவரை நன் என் படத்தில் நல்லவராகதான் காட்டியுள்ளேன்” என பேசினார்.

அவருக்கு பின்னர் பேசிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் “ஜெய் ஆகாஷ் லண்டனில் இருந்து வந்தபோது அவரைப் பற்றி கிசுகிசு எழுதினேன். அவரும் லண்டனில் இருந்து வந்தார். அவரின் காதலியும் லண்டனில் இருந்து வந்தார். பின்னர் அவர் வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டார்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் யார், அவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் யார் என ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.