ஜகமே தந்திரம் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள நேத்து என்ற பாடலின் வீடியோவை நாளைக்கு வெளியிட உள்ளது படக்குழு.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஜூன் 18 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை 17 மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளார்களாம். தனுஷ் இப்போது ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிப்பதால் அவரை முன்னிறுத்தி இத்தனை மொழிகளில் டப் செய்ய உள்ளார்களாம்.
இந்நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள நேத்து என்ற பாடலின் முழு வீடியோவையும் நாளை வெளியிட உள்ளது படக்குழு.