1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (08:31 IST)

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கில்லி மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் கெரடம், தடையறத் தக்க, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், துருவா,  ஸ்பைடர், தீரன் அதிகாரம்  ஒன்று, ரன்வே, டாக்டர் ஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்து  கொண்டார். இவர்களின் திருன்மணம் சமீபத்தில், கோவாயில் நடைபெற்றது. சீக்கிய மற்றும் இந்து முறைப்படி இரு குடும்பத்தினர் முன்னிலையில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் பசுமைத் திருமணம் நடைபெற்றது.

ஜாக்கி பக்னானி பிரபல தயாரிப்பாளர் வாசு பக்னானியின் மகன். இவரும் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக படங்களைத் தயாரித்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் நிறுவனம் தயாரித்த படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் அந்நிறுவனத்துக்கு 250 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கடனை அடைப்பதற்காக மும்பையில் இருந்த தங்கள் சொத்துகளை விற்றுள்ளனர். மேலும் தங்கள் ஊழியர்களில் 80 சதவீதத்தினரை வேலையை விட்டு அனுப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.