வீரப்பனாரின் மீதான பார்வைகளை இது மாற்றும்- 'சாட்டை' துரைமுருகன்
கூச முனிசாமி வீரப்பனனின் வாழ்க்கையும் அவரது வரலாற்றையும் விவரிக்கும் வகையில், டாகுமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது.
இதை தீரன் புரடக்சன்ஸ் சார்பில் பிரபாபதி தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் இன்று முதல் ஜீ5 ல் வெளியாகியுள்ளது.
கூச முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடரை ஜெயச்சந்திர ஹாஸ்மி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இது மொத்தம் 6 எபிஷோட்களை கொண்டுள்ளது.
இந்த நிலையில் வீரப்பனை பற்றி பல புத்தகங்களும், சந்தனக் காடு போன்ற டிவி தொடரும், படமும் வெளியாகியுள்ள நிலையில் இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி துரைமுருகன், ''நக்கீரன் கோபால் அவர்களின் பெரும் பங்களிப்போடு வெளிவந்துள்ள கூஸ் முனுசாமி வீரப்பன் ஆவணப்படத்தன் சிறப்புக் காட்சிக்காக ! ஆவணப்படத்தை திரைப்படத்தை விட வேகமான திரைக்கதையால் நகர்ந்தியிருக்கிற இயக்குனர் மற்றும் குழுவிற்கு வாழ்த்துகள்!
வீரப்பனாரின் மீதான பார்வைகளை இது மாற்றும் என்பது நிதர்சனம் !''என்று தெரிவித்துள்ளார்.