ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (23:40 IST)

ஆயிரம் கோடி பட்ஜெட் படம்: அம்பானி தயாரிக்கும் அமீர்கான் படம்

பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக விளங்கி வரும் அமீர்கானின் படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது 3 இடியட்ஸ், டங்கல் ஆகிய படங்கள் சீனாவில் மட்டுமே பலகோடிகளை வசூல் செய்தது

இந்த நிலையில் அமீர்கானின் கனவு திரைப்படமான 'மகாபாரதம்' படத்தை சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முகேஷ் அம்பானி முன்வந்துள்ளார். உலக தரத்தில் அனிமேஷன் காட்சிகளுடன் மகாபாரத கதையை தத்ரூபமாக மக்களுக்க்கு கொடுக்க வேண்டும் என்பதே அமீர்கானின் விருப்பம்.

இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முகேஷ் அம்பானி இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் பணிகள் இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரூ.500 கோடி பட்ஜெட்டில் இராமாயணம் திரைப்படத்தை தயாரிக்க ஒரு பெரிய நி'றுவனம் முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது