திங்கள், 7 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (11:01 IST)

இவரா அவரா தெரியாது...

இவரா அவரா தெரியாது...

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லாம் தயார்.


 


ஆனால், நாயகி...? படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும், அவர்களை இதுவரை தேர்வு செய்ய முடியாமல் சிவா திணறுவதாகவும் கூறுகிறார்கள்.
 
அஜித்தின் 57 -வது படத்தில் யாரை அவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்பதில் இழுபறி நீடிக்கிறது. அனுஷ்காவை நாயகியாக்கலாம் என்பதே அதிகமானவர்களின் சாய்ஸாக உள்ளது. அவரிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாயகி ரேஸில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரும் இருக்கிறார்கள்.
 
தனது வீரம் படத்தில் அஜித் ஜோடியாக நடித்த தமன்னாவை மீண்டும் நாயகியாக்கலாம் என்ற விருப்பம் சிவாவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்துக்கு யார் ஜோடி என்பதில் அஜித் 57 படக்குழு ரொம்பவே திணறிக் கொண்டிருக்கிறது.