செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (16:08 IST)

பாவனா பாலியல் வன்கொடுமை: நடிகர் திலீப் கைது??

நடிகை பாவனாவை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


 
 
மேலும், நடிகை பாவனா கடத்தல் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 
 
திலீப் தன்னுடைய முதல் மனைவி மஞ்சுமா வாரியரை பிரிவதற்கு, பாவனாதான் காரணமாக இருந்தார் எனவும், அதற்காக பழிவாங்கும் நோக்கத்தோடு திலீப் இந்த செயலை செய்துள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனால் திலீப் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், சக நடிகைக்கு நேர்ந்த இந்த கொடுமைக்காக கவலையும் கோபமும் அடைந்துள்ளேன். என்னை இதில் வேண்டுமென்றே சிலர் சம்மந்தப்படுத்துகிறார்கள். பெண்களை மதிக்கும் நான் இப்படி அசிங்கப்படுத்தமாட்டேன். என்னை தேடி போலீஸ் வரவில்லை. நான் கைது செய்யப்படவில்லை என்று திலீப் கூறியுள்ளார்.