1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 30 மார்ச் 2017 (16:27 IST)

வைரலாகும் ‘டோரா’ படத்தின் நான்கு நிமிட காட்சிகள் - வீடியோ!

தற்போது ரிலீசுக்கு முந்தைய நாள் அந்த படத்தின் ஒருசில நிமிட காட்சிகளை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நயன்தாராவின் 'டோரா' படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

 
நயன்தாராவும் அவரது தந்தை தம்பி ராமையாவும் பழைய கார் ஒன்றை வாங்க செல்கின்றனர். அப்போது பேய்க்குணம் உள்ள  ஒரு பழைய காரை வாங்குகின்றனர். இந்த காட்சிகள் கொண்ட 4 நிமிட 'டோரா' வீடியோ தற்போது பெரும் பரபரப்புடன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.