வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2024 (12:35 IST)

இந்தியன் 3 படம் பற்றி அதிகாரப்பூர்வமாக பேசிய கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் முடிவெடுத்தனர். இதையடுத்து மேலும் சில நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இந்தியன் 2 ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொலல்ப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை இந்தியன் 3 படம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் இறுதி நாளில் இந்தியன் 3 திரைப்படம் பற்றி கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார்.