செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (18:58 IST)

புதுச்சேரியில் திரையரங்குகள் ஸ்டிரைக் வாபஸ்

தமிழகம்-புதுச்சேரி முழுவதும் மார்ச்-16ஆம் தேதியில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரியை குறைக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன
 
இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதாக  உத்தரவாதம் அளித்ததை அடுத்து திரையரங்குகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவித்தார்.
 
ஆனால், புதுச்சேரியில்  திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரியை குறைக்க கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், இன்று புதுச்சேரி அரசு திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக  உத்தரவாதம் அளித்தது. இதனால் வரும் 30-ம் தேதியில் இருந்து திரையரங்குகள் செயல்படும் என புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.