திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (17:22 IST)

சிம்புவின் 'பத்துதல' படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் சிம்பு நடிப்பில்  உருவாகியுள்ள  'பத்துதல' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மா நாடு. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, தற்போது, சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கருஷ்ணா இயக்கி வரும் பத்துதல என்ற படத்தில்  சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தின் சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்தி, பிரியா பவனி சங்கர், கலையரசன் ஆகிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இ ந் நிலையில், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் வெளியாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவத்யால், எனவே பத்துதல படம் வரும் ஜூலை  மாதம்   முதல் வாரம் தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.