கொரோனா சரக்கு அடிக்கும் இலியானா - இப்போ இது உனக்கு தேவையாமா?
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் இலியானா சைஸ் ஜீரோ லுக்கில் மிகவும் ஒல்லியான அழகியாக ரசிகர்களை கவர்ந்தார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து வரும் அவருக்கு காதல், காதலன், காதலனுடன் லிவிங் டூ கெதர் என அனைத்தும் கிடைத்தும் அது நிலைக்காமல் போய்விட்டது. தற்போது 34 வயசாகியும் சிங்கிள் வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.
அம்மணி தற்போது கொரோனா என்ற பெயரில் உள்ள பிராண்டட் விஸ்கியை பீச்சில் ராவா அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். கொரோன வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்தே இந்த விஸ்கி பிரான்ட் விற்பனையில் பின்தங்கி திவால் ஆகிவிட்டது. இந்த சமயத்தில் அதற்கு விளம்பரம் தேடும் வகையில் உள்ள இலியானாவின் இந்த பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.