புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (15:39 IST)

மழைக் கொட்டும்போது எப்படிக் கொட்டும் என்று கேட்பது போல இருக்கிறது? பத்திரிக்கையாளரைக் கலாய்த்த இளையராஜா!

புதிய ஸ்டுடியோவின் திறப்பு விழாவின் போது பேசிய  இளையராஜா கலகலப்பாக பேசியுள்ளார்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பல ஆண்டுகளாக இளையராஜா தனது படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், வழக்கை திரும்ப பெற்றால் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெற்றார். அங்கே இளையராஜாவின் இசைக்கருவிகள் எல்லாம் சேதப்படுத்தும் அளவுக்கு சென்றன.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் பாலத்துக்கு அருகில் இருக்கும் எம் எம் தியேட்டரை வாங்கி அதை தனது புதிய ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார். இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ‘இனிமேல் உங்களிடம் இருந்து எப்படிப்பட்ட பாடல்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது சிரித்துக் கொண்டே ‘மழை பெய்யும் போது எப்படி பெய்யும் என கேட்பது போல இருக்கிறது. அந்த நேரத்தில் எப்படி பாடல் உருவாகிறதோ அப்படிதான் உருவாகிறது.’எனக் கூறியுள்ளார்.