லண்டன் அரங்கில் இளையராஜாவின் சிம்போனி அரங்கேற்றம்.. பெரும் வரவேற்பு..!
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை இன்று லண்டன் அரங்கில் அரங்கேற்றப்பட்ட நிலையில், அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார் மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30க்கு இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மூலமும் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஒவ்வொரு பகுதியையும் தாங்கள் ரசித்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றம் என்பது, இசை உலகில் ஒரு பொன்னான நாள் என்று உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva