தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. முக்கிய அறிவிப்பு..!
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பில் இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் உள்பட சில முக்கிய விவரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாளை மதியம் 12 30 வெளியாகும் இந்த அறிவிப்புக்காக தனுசு ரசிகர்கள் மற்றும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவின் கேரக்டருக்கு தனுஷ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாகவும் தனுஷ் நடிக்கும் படத்தையே இயக்க உள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran