வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (21:48 IST)

அந்த படத்தில் அனிருத்தை இசையமைக்க செய்தது தனுஷ்- ஐஸ்வர்யா ஓபன் டாக்

Aniruth
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் அனிருத். இவர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர், கத்தி, வேதாளம், தர்பார், ஜெயிலர், லியோ, ஜவான் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் பணியாற்றி வருகிறார். 
 
இவர் இசையமைப்பில், வேட்டையன் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அனிருத் பற்றி அவரது உறவினரும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  கூறியதாவது;
 
அனிருத் சினிமாவுக்கு வந்ததில் என்னுடைய பங்கு எதுவும் கிடையாது. அவரிட்ம இசைத்திறமை இருக்கிறது எனக் கூறி, கீ போர்ட் வாங்கிக் கொடுத்தது முதல், நான் இயக்கிய 3 படத்திற்கு அவரை இசையமைக்கச் செய்தது வரை எல்லாமே தனுஷ்தான் பண்ணினார்.  என்று  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகர் தனுஸ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக பரஸ்பரம்  இருவரும் அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.