தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி வரும் "இட்லி கடை" திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த படம் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் , ஏப்ரல் 10ஆம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அருண் விஜய் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே ஏப்ரல் 10ஆம் தேதி, அஜித் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஒரே நாளில் அஜித்தின் மற்றும் தனுஷின் படங்கள் வெளியாவதை உறுதி செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
Edited by Mahendran