வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (20:42 IST)

100 தடவைக்கு மேல பாத்துட்டேன் தலைவர் படத்த: பிரபல இசையமைப்பாளர்

ரஜினியின் பேட்ட படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன் என இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்களிடையே மிகச்சிறப்பான வரவேற்பும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 90 களின் பழைய எனர்ஜிட்டிக்கான ரஜினியை மீண்டும் காட்டியதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜைப் புகழ்ந்து வருகின்றனர். பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, சசிகுமார், நவாஸுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பக்கத்தில் பேட்ட படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள் என கேள்வி கேட்டது. ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்த நேரத்தில் இசையமைப்பாளர் அனிருத் படத்த 100 தடவைக்கு மேல் பாத்துட்டேன் என கமெண்ட் போட்டுள்ளார்.