வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:43 IST)

நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்க கூடாது: 'மீ டு' பிரச்னை எழுப்பிய நிவேதா பெத்துராஜ்

விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்துள்ளார். வரும் தீபாவளிக்கு (நவம்பர் 6ம் தேதி)  'திமிரு புடிச்சவன்' படம் திரைக்கு வருகிறது.  இந்நிலையில்  படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்,
 
அப்போது நிவேதா பெத்துராஜ் கூறுகையில், ‘மீ டூ’ பிரச்சினையில் நானும் பாதிக்கப்பட்டேன். ஒரு ‘பார்ட்டி’க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி’க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார்.
 
மேலும் பெண்களிடம் யாராவது ஒருவன் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று நிவேதா கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு  தவறை வெளிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் பாதிக்கப்படும் என்றார்.