1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2025 (09:26 IST)

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

கன்னடத்தில் பிரபலமான நடிகராக உள்ள கிச்சா சுதீப் தனக்கு மாநில அரசு வழங்கிய விருதை வாங்க மறுத்துள்ளார்.

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். நான் ஈ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் அவர் பிரபலமடைந்தாலும், அதன் பின்னர் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருகிறார். இவர் நடித்த பயில்வான், விக்ராந்த் ரோனா, மேக்ஸ் போன்ற படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இந்நிலையில் 2019ம் ஆண்டில் வெளியான பயில்வான் படத்திற்காக கர்நாடக மாநில அரசு கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான மாநில விருதை அறிவித்துள்ளது. ஆனால் கிச்சா சுதீப் அந்த விருதை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகள் முன்பே விருதுகள் பெறுவதை நிறுத்தி விட்டதாகவும், அதனால் தன்னை விட தகுதியான வேறு எவருக்காவது அந்த விருதை வழங்குமாறும் அவர் கூறியுள்ளார்.

 

கிச்சா சுதீப்பின் இந்த முடிவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், விருதுகள் ஒருவரின் திறமையை நிர்ணயிப்பதில்லை, கிச்சாவின் முடிவு அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K