நான் யாருக்கும் ரெண்டாவது சான்ஸ் தரமாட்டேன்: ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனைக்குரியதாக இருந்த ஓவியா-ஆரவ் காதல் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
ஆரவ்-ஓவியா காதல் இதுவரை ஒருவருக்கொருவர் விரும்பியது என்று நினைத்து கொண்டிருந்த நிலையில், ஆரவ் தனக்கு ஓவியா மீது காதல் வந்ததே இல்லை என்று அடித்து உறுதியாக ஓவியா முன் கூறிவிட்டார்.
இதை சற்று கனத்த மனதுடன் ஏற்றுக்கொண்ட ஓவியா, ஓகே இனிமே என் பின்னால் வராதே, உன்னோடு நட்பாக கூட என்னால் இருக்க முடியாது. கெட் லாஸ்ட், நான் யாருக்கும் ரெண்டாவது சான்ஸ் கொடுக்க மாட்டேன், நம்ம ரெண்டு பேருக்கும் இடையே கதம் கதம்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் ஓவியா-ஆரவ் காதல் அல்லது ஓவியாவின் ஒருதலை காதல் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே நாளை முதல் ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஓவியா நார்மல் ஆகிவிடுவார் என்று கருதப்படுகிறது.