புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (17:45 IST)

திரிஷா நடிப்பிற்கு நான் ஈடு கட்டமுடியாது - சமந்தா

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், நான் அதில் நடிக்கவில்லை என்றும், அதை ரீமேக் செய்ய வேண்டாம் என்றும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார். 
சி.பிரேம்குமார் இயக்கத்தில் தமிழில்  வெளிவந்த 96 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 
தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் திரிஷாவையே  நடிக்கவைக்க திட்டமிட்டனர் படக்குழுவினர். ஆனால் திரிஷா அதற்கு மறுப்பு தெரிவிக்க பிறகு நடிகை  சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 
 
 இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் டிவிட்டரில் கேட்ட, அதற்கு  பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக இந்த படத்தை  ரீமேக் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். 
 
இதற்கு முன்னதாக 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவின் நடிப்பை குறிப்பிட்டு “என்ன ஓர் அற்புதமான நடிப்பு. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தங்களின்  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.