அஜித்குமார் ஒரே சமயத்தில் சினிமாவிலும், கார் ரேஸிலும் கலக்கி வரும் நிலையில் ரேஸுக்கு போவதற்கு முன்பு அவர் பேசியதை இயக்குனர் மகிழ்திருமேனி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். தற்போது இவரது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், துபாய், ஐரோப்பா என பல நாடுகளில் கார் ரேஸிலும் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வருகிறார் அஜித்குமார்.
இந்நிலையில் ரேஸுக்கு செல்லும் முன்பு அஜித்குமார் தன்னிடம் பேசிய ஒரு விஷயத்தை விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனி பகிர்ந்துள்ளார். ரேஸில் பங்கேற்கப்போவது குறித்து மகிழ்திருமேனியிடம் சொன்ன அஜித் “ரேஸில் எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால்தான் என்னை நம்பி பணம், உழைப்பை போட்டுள்ள அனைவருக்காகவும் 2 படங்களையும் முடிக்க வேண்டும் என நினைத்தேன்.
ரேஸிற்கு செல்லும்போது நான் 100 சதவீதம் ஆக்ஸிலேட்டரை அழுத்த வேண்டும். எனக்கு 2 படம் இருக்கு, கமிட்மெண்ட் இருக்கு என நினைத்து 90 சதவீதம் மட்டும் அழுத்தினால் நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என்று ஆகிவிடும்” என கூறியுள்ளார்.
இதை சொன்ன மகிழ்திருமேனி “அவரின் இந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இதை என் வாழ்நாளிலும் நான் மறக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K