இப்போ எப்படி ராமராஜன்? அவரே வெளியிட்ட அறிவிப்பு!
நடிகர் ராமராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியதை அடுத்து இப்போது நலமுடன் இருப்பதாக சொல்லியுள்ளார்.
90 களின் முன்னணி நடிகரான ராமராஜன் இப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் உடல்நிலை குறித்து ராமராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘சில தினங்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற பயம் இருந்ததால் கிண்டி உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது நலமுடம் இருக்கிறேன். நல்ல முறையில் சிகிச்சை அளித்த மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும். சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.