திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (14:35 IST)

ஹிரித்திக் ரோஷன் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார் - கங்கனா ரணாவத்

நடிகர் ஹிரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கங்கனா ரணாவத் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 

 
பாலிவுட் நடிகையான கங்கன ரணாவத் பரபரப்பான பேட்டிகளுக்கு எப்போதும் சொந்தக்காரர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு 17 வயதாக இருந்த போது, நடிகரும், தயாரிப்பாளருமான ஆதித்யா பாஞ்சோலி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், தற்போது அளித்துள்ள மற்றொரு பேட்டியில் “ நடிகர் ஹிரித்திக் ரோஷனும், நானும் காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கேட்டேன். ஆனால், தனக்கு திருமணம் ஆகி விட்டதை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்தார். நம் காதல் வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்றார். அதுபிடிக்காமல் அவரை விட்டு விலகி இருந்தேன்.
 
அதன் பின் ஒரு நாள் என்னை அழைத்து, நான் எனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளேன். அதன்பின் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். அதை நம்பி மீண்டும் அவரிடம் பழகி வந்தேன். ஆனால், மற்றொரு நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது ‘ என்னை மறந்து விடு’ என்றார்.
 
அதன் பின்னரே அவருடனான காதலை நான் வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தினேன். அதைத் தொடந்து எனக்கு மிரட்டல் வந்தது. மேலும், ஹிருத்திக் ரோஷனுக்கு நான் எழுதிய கடிதங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை இணையத்தில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தினர்.
 
இது தொடர்பாக மகளிர் ஆணையத்தில் முறையிட்டேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு நடிகைக்கே இந்த நிலைமை எனில் சாதாரண பெண்களின் கதியை நினைத்துப் பாருங்கள்” என அவர் கூறினார்.