திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:32 IST)

இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்கால் பத்திக் கொண்ட வியாபாரம்!

இந்தி தெரியாது போடா என்ற வாசகம் எழுதப்பட்ட டிஷர்ட்களுக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதால் இப்போது இந்த டிஷர்ட்க்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

டிஷர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள திருப்பூரில் இதுவரைக்கும் 15,000 ஆர்டர்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.