பாலிவுட்டிற்கு போன வேகத்திலே திரும்பி வந்ததுக்கு இதுதான் காரணமாம் - எங்க தமிழச்சிடா கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் பாலிவுட் பக்கம் தாவினார். அங்கு போனி கபூர் தயாரிப்பில் இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் கீர்த்தி இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுட்டது.
ஆனால், படக்குழுவினர் கீர்த்தியிடம் ஒரு காட்சியில் பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு கீர்த்தி நோ... நான் அதெல்லாம் போடமாட்டேன் ரொம்ப செக்ஸியா இருக்கும் என கூறி அந்த படத்தில் இருந்தே வெளியேறிவிட்டாராம். கீர்த்தியின் இந்த கட்டுப்பாட்டை தமிழ் சினிமா ரசிகர்கள் மார்தட்டி வரவேற்கின்றனர்.