வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (18:44 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் பிரபல பாடகிக்கு உதவி...

இந்திய சினிமாவின் பொக்கிஷமாகக் கருதப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரிடம் பிரபல பாடகி ஒருவரு உதவி கேட்டிருந்த தகவல் வெளியாகிறது.

ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடிக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்கதை எழுதி இசையமைத்த திரைப்படம் 99 சாங்ஸ். இப்படம் சமீபத்தி ரிலீசாகிப் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் புரமோசன் விழாவில் பேசிய ரஹ்மான், இப்படத்தை ஓடிடியில் பார்த்தீர்களா என நான் பாடகி சுசீலா அம்மாவிடம் கேட்டேன்.  அவர் அப்படி என்றால் என என்னிடம் கேட்டார். பின்னர் தனது தயாரிப்பு மற்றும் திரைக்கதையில் வெளியாகியுள்ள படம் என்று கூறினேன்.

இதைப்பார்த்து மகிழ்ந்த அவர், ஒருமுறை இப்படம் பார்த்துவிட்டு தன்னிடம் படம் நன்றாக உள்ளதாகக் கூறினார்.  அப்போது, தன்னுடைய வாழ்க்கை வரலாறும் இதேபோல் வரவேண்டும் என சுசீலா அம்மா கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  99 சாங்க்ஸ் போன்று சுசீலா அம்மாவின் படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.