செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:34 IST)

மலேசியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி!

malaysia
மலேசியாவில் ஏற்பட நிலச்சரியில் 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 16  பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.
 

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் வேளாண் பண்ணை உள்ளது.

இந்த வேளாண் பண்ணை அருகில் பலர் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த  நிலச்சரிவில் 79 பேர் சிக்கியதாகவும், 26 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், 16 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் 50 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகிறது.

Edited By Sinoj