திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (23:52 IST)

அவர் தான் என் கண்ணுக்கு ஹீரோவாக தெரிகிறார் - பிரபல நடிகையில் செல்ஃபி வைரல் !

ராமு தான் என் கண்களுக்கு உண்மையான ஹீரோவாகத் தெரிகிறார் என நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.

நடிகை கனிகா சென்னையில் வசிக்கு வீட்டருகே துப்புரவு பணி செய்வது வருபவர் ராமு. இவர் சில வருடங்களாக அதே இடத்தில் அமைதியாக வேலை செய்துகொண்டு வந்துள்ளார்.

இன்று காலை அவரைப் பார்த்த கனிகா வணக்கம் சொல்லியுள்ளார். அதைப் பார்த்த மாத்திரத்தில் ராமுகண்கலங்கியுள்ளார். தனக்கு யாரும் வைக்காத போது நீங்கள்தான் முதன்முதலாக வணக்கம் வைத்துள்ளீர்கள் என்று கூறி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்டுள்ளார்.

கனிகா அவருடம் செல்ஃபி எடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துடன் அவரைப் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறி, அவரை ரியல் ஹீரோ எனத் தெரிவித்துப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் நாங்கள் இருவரும் மாஸ்க் அணிருந்தோ ம் செல்பிக்காக கழட்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.