செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:19 IST)

கார்த்தி படத்தின் பாடல்களை கம்போஸ் செய்த ஹாரிஸ் ஜெயராஜ்

ஷூட்டிங் தொடங்கவில்லை என்றாலும், கார்த்தி படத்துக்காக பாடல்களைக் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.

 
கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 5 அக்காள்களுக்குத் தம்பியாக நடிக்கும் கார்த்தி, விவசாயி வேடத்தில் நடிக்கிறார்.
 
இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி போடுகிறார் ரகுல் ப்ரீத்சிங். லட்சுமணன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பாடல்கள் ஷூட்டிங் செய்யப்படும் இடங்களுக்கு விஸிட் அடித்த ஹாரிஸ் ஜெயராஜ், உடனடியாகப் பாடல்களைக் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம். எனவே, இந்தப் படத்தின் ஷூட்டிங்கே பாடல்களுடன் தான் தொடங்கும் என்கிறார்கள்.