வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (11:29 IST)

தந்தைக்கு உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஏ.ஆர்.அமீன்!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று தன்னுடைய  52வது பிறந்த நாளைகொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு திரையுலகினர் பலர்  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


 
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'ஓகே கண்மணி', சச்சின், மற்றும் சமீபத்தில் வெளியான '2.0' ஆகிய படங்களில்  ஒருசில பாடல்களை பாடியுள்ளார்.
 
இவர் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தைக்கு உருக்கமாக, அனைவரையும் நெகிழவைக்கும் வகையில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'அன்புள்ள தந்தையே! இன்றைய உங்கள் பிறந்த நாளில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள்தான் என்னுடைய உண்மையான நண்பர், ஆசிரியர் மற்றும் உத்வேகத்தை தூண்டும் அனைத்தூமாக உள்ளீர்கள்' என்று தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.அமீனின் இந்த ஒரே ஒரு டுவீட் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.