செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (20:03 IST)

விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் ஹெச்.வினோத்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில்  G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் பற்றி பரவி வந்த அரசியல் வதந்திகளுக்கு முற்றுப் பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்று அவரது புதிய கட்சிக்கு பெயரிட்டு, தன் கட்சியைப் பற்றி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இவரது 68 வது படம்  G.O.A.T என்ற நிலையில்,  அரசியலுக்கு வந்துவிட்டதால் இவரது கடைசி படம் விஜய்69 என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  ஹெச்.வினோத் நடிகர் விஜய்க்கு ஒரு கதை ஒன்றை கூறியுள்ளதாக  உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் நடிக்கும் படத்தை வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசன் நிறுவனத்தில் இப்படத்தை இயக்க தடையில்லா சான்று கிடைத்தால்  விஜய்யின் படத்தை  எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.