திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:39 IST)

சூரரை போற்று இந்தி ரீமேக்: முக்கிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

GV Prakash
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் வெளியான நேரத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு இருந்ததால் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சூர்யா வேடத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் பணி முடிந்து விட்டதாகவும் விரைவில் பாடல்கள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva