திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (06:28 IST)

நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டோம்.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு..!

gv prakash saindhavi
நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டோம் என்று ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த வதந்தி உண்மையாகி உள்ளது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஜிவி பிரகாஷ் தனது பள்ளிக்கால தோழி சைந்தவி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று இரவு ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் 11 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் எங்களுடைய தனிப்பட்ட இந்த முடிவுக்கு ஊடகங்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மதிப்பளித்து எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிந்து வாழ்வதாக கூறப்பட்ட செய்தி உண்மையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva