சூர்யா கௌதம் மேனன் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள குறும்படம் நவரசா ஆந்தாலஜியில் வெளியாக உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.
இதில் சூர்யா நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய இந்த கதைக்கு கிடார் கம்பியின் மேலே நின்று என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் வித்தியாசமான தலைப்புகளை தனது படங்களுக்கு வைக்கும் கௌதம் மேனன் இந்த தலைப்பையும் மிகவும் வித்தியாசமாக வைத்துள்ளார்.