வெளியான உடனேயே ஓடிடியில் முத்திரை பதித்த கருடன்!
விடுதலை படத்துக்குப் பிறகு சூரி ஹீரோவாக நடித்த கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
இந்த படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முதல் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. இந்நிலையில் இன்று கருடன் திரைப்படம் இந்திய அளவில் ட்ரண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இதை அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.