ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (09:44 IST)

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நிறைய விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்படுகின்றன.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு அபரிமிதமான வரவேற்பும் பாரட்டுகளும் கிடைத்தன. அதையடுத்து இப்போது டிரான்சில்வேனியா திரைப்படா விழாவிலும் திரையிடப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகி கவனம் பெற்ற நிலையில் நாளை அடுத்த பாடல் ரிலீஸாக உள்ளது. இந்த பாடலை யுவன் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடுகிறார். மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.