ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 10 ஜூலை 2017 (05:47 IST)

கலகலப்பான கஞ்சா கருப்பு வெளியேற்றம்: இனி என்ன ஆகும் பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பங்கேற்பாளர்களில் கள்ளங்கபடம் இன்றி கலகலப்பாக அனைவரிடமும் பழகி வந்த கஞ்சாகருப்பு நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை மற்ற பங்கேற்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.



 
 
 பரணி , கஞ்சா கருப்பு , ஓவியா இவர்களில் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலை முந்தைய நாள் இருந்தது. இந்த நிலையில் பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் கஞ்சாகருப்பு வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
 
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சாகருப்பு பின்னர் கமல்ஹாசனுடன் தன்னுடைய 13 நாள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்த 13 நாளில் தான் சமையல் மற்றும் யோகா கற்று கொண்டதாகவும், நமீதாவை பிரிவது குறித்து தான் வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளே இருந்தவர்களில் கலகலப்பாக இருந்த ஒரே நபர் கஞ்சாகருப்புவும் வெளியேறிவிட்டதால் அடுத்து இந்த நிகழ்ச்சி என்ன ஆகும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்