செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (15:05 IST)

ஆலியா பட்டின் கங்குபாய்…. விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள கங்குபாய் படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

இந்தியில் ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி போன்ற படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. தற்போது இவர் ஆல்யா பட் நடிப்பில் கங்குபாய் கத்யாவாடி என்ற படத்தை இயக்கி, இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த பிபரவரி 25 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் சமூக ஆர்வலரான கங்குபாயை பாலியல் தொழிலாளராக தவறாக சித்தரித்துள்ளதாக கங்குபாயின் மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.