திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (11:43 IST)

கணேஷ் வெங்கட்ராமை வச்சு செஞ்ச சினேகன்

நேற்று ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், கணேஷ் வெங்கட்ராமை வச்சு செய்தார் சினேகன்.

 
 
நேற்று ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், ஹவுஸ்மேட் இரு அணிகளாகப் பிரிந்து அவர்களுடைய டெய்லி டாஸ்க்கை  செய்தனர். அதாவது, ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர், கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள சேரில் உட்கார வேண்டும்.  அந்த சேரில் இருந்து அவர்களை எழுப்புவதே எதிர் அணியின் டாஸ்க்.
 
கணேஷ் வெங்கட்ராம், ஹார்த்தி இருவரும் சேரில் உட்கார, முட்டை, மாவு, சோப்பு தண்ணீர் உள்ளிட்ட பொருட்களால் அடித்து அவர்களை மற்ற ஹவுஸ் மேட்ஸ் சேரில் இருந்து எழுப்ப முயற்சித்தனர். அப்போது சினேகன் சோப்பு தண்ணீரை வேகமாக  கணேஷ் முகத்தின்மீது அடிக்க, அவருடைய கண்களில் அது பட்டுவிட்டது. பயங்கர போர்ஸாக சினேகன் அடித்ததுடன், அதன்பிறகு மிளகாய்த்தூள் கலந்து தண்ணீரையும் கணேஷ் மீது ஊற்றினார்.
 
இது, பார்வையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தன்னிடம் இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,  தன்னைக்கூட காப்பாற்றிக் கொள்ளாமல் சினேகனை எவிக்‌ஷன் புராசஸில் இருந்து காப்பாற்றியவர் கணேஷ் வெங்கட்ராம். அந்த நன்றி கொஞ்சம்கூட இல்லாமல் சினேகன் இப்படிச் செய்தது எல்லோரையும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.