செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 4 ஜூன் 2017 (16:50 IST)

ஓராண்டு மட்டுமே பாடுவேன்; பிரபல பாடகரின் திடீர் முடிவு

சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடுவேன் என்று பிரபல பாடகர் கானா பாலா திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
தமிழ் சினிமாவில் கானா பாடலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளவர் கானா பாலா. அட்டக்கத்தி படத்தில் பாடல்கள் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். சூது கவ்வும் படத்தில் இவர் பாடிய காசு பணம் துட்டு என்ற பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் இவரும் நடித்து இருப்பார். 
 
இவர் கானா பாடல்கள் எழுதுவதிலும் திறமையானவர். இந்நிலையில் தற்போது இஅவர் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடல்கள் பாடுவேன் என தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவுப்புக்கு காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.